கள்ளச்சாராயம் அருந்தி செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் இன்று (மே 17) கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தை உலுக்கி வரும் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் இதுவரை விழுப்புரத்தில் 14 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இன்று காலையில் சென்னை அருகே மதுரவாயல் கெமிக்கல் ஆலை உரிமையாளரான இளையநம்பி இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 1,000 லிட்டர் மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு விற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
அவரைத்தொடர்ந்து விஷச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர் செங்கல்பட்டு மாவட்ட தெற்கு பாஜக ஓபிசி அணியின் தலைவராக இருந்து வருகிறார்.
தற்போது கள்ளச்சாராய வழக்கில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளதாக பாஜக மாவட்ட தலைவர் மோகனராஜா அறிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்: 5 மாவட்டங்களில் கனமழை!
கேன்ஸ் 2023: சிவப்பு கம்பளத்தில் வேட்டியுடன் நடைபோட்ட எல்.முருகன்