நாராயணன் திருப்பதிக்கு புதிய பதவி!

அரசியல்

தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஊரக மின்வசதியாக்க பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநராக நேற்று (மார்ச் 9) பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. கடந்த வாரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜகவை சேந்த நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டார்.

அந்தவகையில், பாஜக தமிழக துணை தலைவர் நாராயணன் திருப்பதிக்கு ஊரக மின்வசதியாக்க பொதுத்துறை நிறுவனத்தின் REC Ltd இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “பொதுத்துறை நிறுவனமான REC Ltd நிறுவனத்தின் இயக்குனராக இன்று டெல்லியில் பொறுப்பேற்று கொண்டேன்.

அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பிற இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற இயக்குநர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன்.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அமைப்பு பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் அவர்களின் ஆசி வேண்டுகிறேன்.

பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் அவர்களுக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆளுநர் மாளிகை நோக்கி சவப்பெட்டி ஊர்வலப் போராட்டம்!

+1
0
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *