18-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் இன்று (ஜூன் 20) நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நிறைவடைந்தது. ஜூன் 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின் படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பிரதமராக மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்தநிலையில், 18-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 24 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரின் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
இந்தநிலையில், தற்காலிக சபாநாயகராக பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப்பை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று நியமித்துள்ளார்.
தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்காக திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஸ்ரீ சுரேஷ் கொடிக்குன்னில், ரீ ராதா மோகன் சிங், ஸ்ரீ ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் ஸ்ரீ சுதிப் பந்தோபாத்யாய் போன்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தொடரின் போது புதிதாக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுபான வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது மரக்காணம் சரக்கா? கன்னுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை விவரம்!