நெல்லையில் பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மூளிகுளத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஆகஸ்ட் 30) மூளிக்குளம் கடைவீதியில் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பி சென்றுள்ளார். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெகனை கொடூரமாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜெகனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக கட்சியின் பிரமுகர், வெட்டிக்கொலை செய்யப்பட்டதையடுத்து, அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சரவணன்
நெட் இல்லாமல் யுபிஐ-யில் பணம் அனுப்புவது எப்படி?
மெட்ரோ சேவை பாதிப்பு: பயணிகள் அவதி!