சென்னை வந்தடைந்தார் அமித்ஷா

Published On:

| By Selvam

பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 10) சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து சென்னை கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில் துறை சார்ந்த 24 முக்கிய பிரமுகர்கள் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கின்றனர்.

நாளை காலை 11.40 மணியளவில் சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பின்னர் மதியம் 1.40 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அமித்ஷா வேலூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மதியம் 2.45 மணியளவில் பள்ளிக்கொண்டா காந்தனேரியில் நடைபெறும் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

பின்னர் மாலை 3.55 மணிக்கு வேலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு திரும்பும் அமித்ஷா, மாலை 5.50 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு செல்கிறார்.

செல்வம்

’தி கேரளா ஸ்டோரி’ இயக்குநரின் அடுத்த அப்டேட்!

“பாஜக முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம்”: மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel