மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாள் இன்றோடு (அக்டோபர் 29) நிறைவடைய இருக்கும் நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்வதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
வருகிற நவம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியும், ‘மகாயுதி’ கூட்டணியும் மோத உள்ளன. சிவசேனா கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்ததன் பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. அதனால் இந்த தேர்தலை நாடே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி இன்றோடு (அக்டோபர் 29) முடிவடையவிருக்கும் நிலையில், அங்கு ஆட்சியில் இருக்கும் ‘மகாயுதி’ கூட்டணி 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதிலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதிலும் குழப்பம் நிலவிவருகிறது.
‘மகாயுதி’ கூட்டணியில் உள்ள பாஜக 148 வேட்பாளர்களின் பெயர்கள், ஏக்னாத் ஷிண்டேவின் சிவ சேனா 78 வேட்பாளர்களின் பெயர்கள், மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 51 வேட்பாளர் பெயர்களையும் தற்போது வரை அறிவித்துள்ளன.
மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 83 வேட்பாளர்கள் பெயர்கள், காங்கிரஸ் கட்சி 103 வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 85 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன.
இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி பச்பக்கடி மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் பாராமத்தி தொகுதிகளில் வேட்புமனுக்களை நேற்று (அக்டோபர் 28) தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற ஏக்நாத் ஷிண்டேவுடன் தொண்டர்கள் கூட்டமாகச் சென்றனர்
கோப்ரி பச்பக்கடி சட்டமன்றத் தொகுதி 2009 ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து, ஏக்நாத் ஷிண்டேதான் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
அவருக்கு எதிராகச் சிவ சேனாவின் மறைந்த மூத்த தலைவரான ஆனந்த் திகேவின் உறவினர் கேதவ் திகேவை உத்தவ் தாக்ரே சிவ சேனா களமிறக்கியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டிஜிட்டல் திண்ணை: விஜய் மாநாடு… அறிவாலயக் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
ஜெயலலிதா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தால்… எஸ்.பி.வேலுமணி ரிப்பீட்!
24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அலைபாயுதே கார்த்திக் -சக்த