போலீசாரின் தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
பாஜக சார்பில் திண்டிவனத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற இருந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
எனினும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் சென்றனர்.
இதனை அறிந்த போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடையை மீறி சென்ற எச்.ராஜாவை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து அவரை விடுவிக்கக்கோரி பாஜகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராகிம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன? : குடியரசுத் தலைவர் பதில்!
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!