அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக இன்று (நவம்பர் 1) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவின் நிர்வாகிகளும், நடிகைகளுமான குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை தவறான முறையில் பேசியிருந்தார்.
இவரின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வருத்தம் தெரிவித்திருந்தார்.
அதுபோல், சைதை சாதிக் மன்னிப்பு தெரிவித்திருந்தார்.
என்றாலும், சைதை சாதிக் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜகவில் உள்ள பெண்களைத் திமுகவினர் கண்ணியக்குறைவாக பேசுவதாகக் கூறி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (நவம்பர் 1) பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணியினர் கலந்துகொண்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது அவர்கள் திமுகவிற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஜெ.பிரகாஷ்