தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் அவருக்கு பரிசாக கொடுத்தார் என்று பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமன் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.
தனது ஆறு லட்சம் மதிப்புடைய ரஃபேல் வாட்ச் ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று செந்தில் பாலாஜி கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “நான் விரைவில் என்னுடைய ரஃபேல் வாட்ச் பில்லையும் திமுக நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன்” என்றார்.
அதன்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி தனது ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார்.
இதுதொடர்பாக கல்யாண ராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அந்த 6 லட்சம் மதிப்புடைய ரஃபேல் வாட்ச் 17-18 அதிமுக – டிடிவி குரூப் எம்எல்ஏக்களை கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தனது உறவினராகிய அண்ணாமலை வைத்து நன்றாக கவனித்துக் கொண்டதற்காக செந்தில் பாலாஜியால் 2017ல் சுயமாக வழங்கப்பட்ட வெகுமதி.
செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலையிடம் வாட்ச்சின் பில் இல்லை என்பதும் தெரியும். அதை தரமுடியாது என்பதும் தெரியும். கொடுத்தவரே கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தயங்கிய அண்ணாமலை அடுத்தவர் கட்டி இருந்த வாட்ச்சை விலை கொடுத்து வாங்கியதாக பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
பதில் சொல்ல 100 நாட்கள் ஆனதன் ரகசியம் இதுதான். மொத்தத்தில் நான் ஒரு கிளீன் ஆபிசர் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தது எல்லாம் பொய்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மருத்துவமனையில் அட்மிட்: செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு?
ரூ.2,391 கோடியில் பேரூராட்சி மேம்பாட்டுத் திட்டம்: லிஸ்ட் போட்ட தமிழக அரசு!