பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன் இன்று (மார்ச் 7) அதிமுகவில் இணைந்தார்.
கடந்த மார்ச் 5-ஆம் தேதி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அவரை தொடர்ந்து நேற்று பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் பாஜவில் இருந்து விலகினார்.
இந்தநிலையில், இன்று திலீப் கண்ணன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, அதிமுகவில் இணைந்தார். அவருடன் பாஜக ஓபிசி அணி தலைவர் அம்மு ஜோதி, திருச்சி மாவட்ட துணை தலைவர் விஜய் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.
செல்வம்