அண்ணாமலை மேற்கொள்ளும் பாத யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு தேதிமுகவுக்கு இன்று (ஜூலை 26) பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் வரும் 28-ம் தேதியில் இருந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ’என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் 110 நாட்கள் பாத யாத்திரையை தொடங்க உள்ளார்.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நிறைவு விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளனர்.
பாதயாத்திரை தொடக்க நிகழ்வுக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்தார். ஆனால் தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை பாஜக சார்பில் அக்கட்சி மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் இன்று நேரில் சந்தித்து, அண்ணாமலையின் பாத யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது, எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா பேசியிருந்தார்.
இது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்க தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கால்வாய்க்காக அழிக்கப்படும் நெற்பயிர்கள்: என்.எல்.சி விளக்கம்!
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!