4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துள்ளது பாஜக.
மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(டிசம்பர் 3) காலை தொடங்கியது முதல் பாஜக முன்னிலையில் நீடித்து வருகிறது.
பிற்பகல் 2 மணி நேர நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் பாஜக 158 இடத்திலும், காங்கிரஸ் 69 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
இதுவரை யாரும் வெற்றிபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
புத்னி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் 50,996 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரான விக்ரம் மஸ்தாலை விட முன்னணியில் உள்ளார்.
சிந்த்வாராவில் பாஜக வேட்பாளர் விவேக் பூந்தி சாஹுவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் கமல்நாத் 16,559 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மகளிர் பிரதேசமான மத்திய பிரதேசம்
மூன்று மாநிலத்தில் வெற்றி உறுதி… ராகுல், உதயநிதியை தாக்கும் பாஜகவினர்!