|

நேற்று கட்சி தாவிய அசோக் சவான் : இன்று எம்.பி. சீட் கொடுத்த பாஜக

பாஜக தேசிய தலைவரான ஜே.பி. நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ராஜ்ய சபா உறுப்பினர்கள் 56 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில்  பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் பட்டியலில் குஜராத்தில் இருந்து ஜே.பி.நட்டா, மகாராஷ்டிராவில் இருந்து அசோக் சவான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ராஜ்யசபா தேர்தலுக்கான 7 பேர் அடங்கிய கூடுதல் வேட்பாளர் பட்டியலை பாஜகவின் மத்திய தேர்தல் குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் குஜராத்தில் இருந்து 4 பேர் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து 3 பேர் என இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி குஜராத்தில் இருந்து பாஜக தேசிய தலைவரான ஜே.பி. நட்டா, தோலாக்கியா, மயங்க்பாய் நாயக் மற்றும் ஜஷ்வந்த்சிங் சலாம்சிங் பர்மர் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று மகாராஷ்டிராவில் இருந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான், மேதா குல்கர்னி மற்றும் அஜித் கோப்ச்சடே ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது.

Image

வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி தேதி என்ற நிலையில், இன்று 7 பேர் அடங்கிய பெயர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் : ஜாக்டோ ஜியோ

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts