பாஜக முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை!

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 2) வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி பாஜக வேட்பாளர் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையாததால், வேட்பாளர்கள் தொடர்பான பரிசீலனை முடிவை பாஜக நிறுத்தி வைத்திருப்பதாக, முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு? மோடி – அமித்ஷா நள்ளிரவு ஆலோசனை என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (மார்ச் 1) நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதேபோல, கூட்டணி குறித்த நல்ல முடிவை மார்ச் 5-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருப்பதாக பொறுத்தது போதும்… எடப்பாடிக்கு அமித்ஷா இறுதி கெடு என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், தான் இன்று வெளியான முதல் வேட்பாளர் பட்டியலில், தமிழ்நாட்டின் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேநேரத்தில் குஜராத், மேற்குவங்கம் , அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 116 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் இருந்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகர் தொகுதியில் இருந்தும் போட்டியிட உள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வைரலாகும் வரலட்சுமி சரத்குமாரின் ‘நிச்சயதார்த்த’ புகைப்படங்கள்!

காசியில் மோடி, காந்திநகரில் அமித்ஷா : முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *