அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பாஜக தோல்வி முகம்!

Published On:

| By christopher

ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரை விட  சமாஜ்வாதி வேட்பாளர் 47,935 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டது தேர்தலில் வாக்குகளாக மாறும் என பாஜக நம்பியது. ஆனால் அதற்கு மாறாக தற்போது நிகழ்ந்துள்ளது.

காலை முதலே ஃபைசாபாத் தொகுதியில் சமாஜ் வாதி கட்சி முன்னிலை பெற்ற நிலையில், பாஜக பின்னடைவை சந்தித்து வந்தது.

மாலை 4 மணி நிலவரப்படி, சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட அவதேஷ் பிரசாத் 4,68,523 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக சார்பில் 3வது முறையாக போட்டியிட்ட லல்லு சிங் 4,20,588வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் 47,935 வாக்குகள் வித்தியாசத்தில் அவதேஷ் முன்னிலை வகித்து வருகிறார்.

அவருக்கு யாதவ் சமூகம் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவு பெருமளவில் குவிந்த நிலையில், அவதேஷ் ஃபைசாபாத் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தருமபுரி திருப்பம்… 20000 வாக்குவித்தியாசம்… உறுதியாகும் திமுக வெற்றி!

விளவங்கோட்டை தக்கவைத்து கொள்ளும் காங்கிரஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel