மக்களவை தேர்தலுக்கான ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் நாளை (ஏப்ரல் 14) காலை 8.30 மணிக்கு வெளியாகிறது.
மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன்படி தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக மட்டும் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிடாமல் இருந்து வந்தது.
இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்தன.
இந்தநிலையில், ‘சங்கல்ப் பத்ரா’ எனப்படும் பாஜகவின் தேர்தல் அறிக்கையானது டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நாளை காலை 8.30 மணியளவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதில் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் உறுப்பினர்கள் என 27 பேர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்…
லிங்க்-ஐ அழுத்தினால் ரூ. 500? : பாஜகவிற்கு எதிராக திமுக புகார்!