அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று (அக்டோபர் 5) பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை அண்ணாமலையால் சந்திக்க முடியவில்லை. இந்தநிலையில் அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை திரும்பிய அண்ணாமலை உடல் நிலை சரியில்லாததால் வீட்டிற்கு செல்லாமல் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அண்ணாமலை 2 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதனால் அக்டோபர் 6 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கவிருந்த என் மண் என் மக்கள் மூன்றாம் கட்ட நடைப்பயணம் 10 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் நூற்றாண்டு: ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம்!
அறிமுகமானது ‘Google Pixel 8’ ஸ்மார்ட்போன்கள்: விலை எவ்வளவு தெரியுமா?