இன்று (மார்ச் 4) சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இக்கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையிலேயே காத்திருந்திருக்கிறார். கடந்த முறை பல்லடம் கூட்டத்திற்கு ஓ.பி.எஸ்-க்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. கண்டிப்பாக மார்ச் 4ம் தேதி கூட்டத்திற்கு உங்களை அழைப்போம் என அவரிடம் பாஜக தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.
ஆனால் அழைப்புக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்-க்கு கடைசி வரை போன் எதுவும் வரவில்லை. இந்நிலையில் இவரே பாஜகவில் உள்ள தனது நண்பர்களுக்கு போன் செய்து கேட்ட போது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லியிருக்காங்க.
இதனால் ஓ.பி.எஸ் நேற்றே கிளம்பி பெரியகுளம் சென்றுவிட்டார். அங்கு தனது ஆதரவாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், பாஜக தரப்பிலிருந்து தொடர்ச்சியாக ஆட்களை விட்டு எடப்பாடியிடம் கூட்டணி பேச முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் நாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டால் சரியாக இருக்காது என்று நினைக்கிறார்கள். அதனால்தான் நம்மை அழைக்காமல் இருக்கிறார்கள். இனிமே நாமாக சென்று எதுவும் கேட்க வேண்டாம். அவர்களாக அழைத்தால் போவோம் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் ஓ.பி.எஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை வரும் பிரதமர் மோடி : பாதுகாப்பு அதிகரிப்பு!
துரைமுருகனை தொடர்பு கொண்ட வைகோ… வைகோவுக்கு எடப்பாடி தூது!
தமிழ்நாட்டு அரசியல் வானம் தி.மு.க! மேகங்கள் கலையலாம், வானம் மறையுமா?
IPL 2024: சிஎஸ்கே அணிக்கு வந்த புதிய சிக்கல்