நடிகை குஷ்பு உள்ளிட்டோரை அவதூறாகப் பேசிய சைதை சாதிக் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, கெளதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை அவதூறாகப் பேசியதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் சைதை சாதிக் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாஜக பெண் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இந்த புகார் மனு விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையருக்கு அனுப்பப்படுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நதியா சீனிவாசன் , “பெண்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
பெண்களை இதுபோன்று அவதூறாகப் பேசி வந்தால் தேர்தல் சமயத்தில் திமுகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி சைதை சாதிக் பேசியிருக்கிறார். அவர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
இதுபோன்று தொடர்ந்து பேசி வந்தால் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
கனிமொழி எம்.பி.பொத்தாம் பொதுவாக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார். ஏன் கட்சி ரீதியாக சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களுக்கான முன்னேற்றம் எனக் கூறிக் கொண்டு இப்படி இழிவுபடுத்திப் பேசிக்கொண்டிருக்கின்றனர்” என்று கூறினார்.
பிரியா
மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!
தேவர் குருபூஜை : 500 கார்கள் ரெடி – மாஸ்காட்ட தயாராகும் ஓபிஎஸ்