கர்நாடகா தேர்தல்: சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜே.பி.நட்டா

Published On:

| By Selvam

கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.

கர்நாடகாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஹப்பள்ளி பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

நேற்று கர்நாடகா கலபுர்கி பகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் பாதி நிர்வாகிகள் சிறையில் உள்ளனர், மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

அவர்கள் ஊழல் குறித்து பேசலமா” என்று கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருந்தார். பிரச்சாரத்தின் போது அங்குள்ள ஒரு சாலையோர கடையில் ஜே.பி.நட்டா தேநீர் அருந்தினார். அவருடன் பாஜக நிர்வாகிகளும் தேநீர் அருந்தினர். பலரும் நட்டாவுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

செல்வம்

RR vs GT: சஞ்சுசாம்சனால் மோசமான தோல்வியைப் பதிவு செய்த ராஜஸ்தான்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா கோலாகலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel