தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் குறித்து பாஜக குழுவினர் முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருநாகராஜன், “தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி வருவாய் இழப்பை ஈடு செய்ய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை கொடுப்போம் என்று தெரிவித்திருந்தோம்.
அதன்படி ஜூலை 8-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜூலை 11,12,13 ஆகிய தேதிகள் அல்லது இம்மாத இறுதிக்குள் முதல்வருக்கு உகந்த தேதி ஒன்றை ஒதுக்கி தந்தால் பாஜக குழு வெள்ளை அறிக்கையை ஒப்படைக்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். முதல்வரிடமிருந்து அந்த கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. முதல்வர் ஸ்டாலின் விரைவில் அப்பாயின்ட்மென்ட் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசு 500 மதுக்கடைகளை வருவாய் இழப்பு காரணமாக மூடியிருக்கிறார்கள். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் மதுக்கடைகள், கோவில்கள் அருகிலுள்ள மதுக்கடைகளை தமிழக அரசு மூடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!
“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்” – எடப்பாடி வலியுறுத்தல்!