அமர் பிரசாத் ரெட்டி கைது – நவம்பர் 3 வரை காவல்!

அரசியல்

தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே அனுமதியின்றி 45 அடி உயரத்தில் பாஜகவினர் கொடிக் கம்பம் நட்டனர்.

இந்த கொடிக் கம்பம், உயர் அழுத்த மின்கம்பிகளுக்கு அருகில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் புகார் தெரிவித்தனர்.

மாநகராட்சியிடமும் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக முறையான அனுமதி பெறவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் அந்த கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக நேற்றிரவு சென்ற போது போலீசாருக்கும் பாஜகவினருக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டது.

இதில் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபியின் கண்ணாடியை பாஜகவினர் அடித்து நொறுக்கினர். இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கானாத்தூர் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, திருவல்லிக்கேனியை சேர்ந்த கன்னியப்பன், பாலமுருகன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த செந்தில் குமார், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்திர குமார், நங்கநல்லூரைச் சேர்ந்த பாலா என்கிற வினோத் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி சென்னையில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரை போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர்  புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

அமர் பிரசாத் ரெட்டியின் கைதுக்கு பாஜகவைச் சேர்ந்த சிடி ரவி, எச்.ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரியா

சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள்: தோல்வியில் இருந்து மீள்வார்களா?

எய்ம்ஸுக்கு செங்கல்… நீட்டுக்கு முட்டை : மத்திய அரசை விமர்சித்த உதயநிதி

“பாகிஸ்தான் ஜிந்தாபாத் கூடாது”: பெங்களூரு போட்டியில் வெடித்த சர்ச்சை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *