BJP alliance with whom?

பாஜக யாருடன் கூட்டணி? கமலாலயம் வருகிறார் பி.எல். சந்தோஷ்

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகிவிட்டன. BJP alliance with whom?

கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி என மூன்று அணிகள் உருவாகும் சூழல் நிலவுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் இன்று வரை அதே அரசியல் நிலைப்பாட்டில் தான் இருக்கிறது அதிமுக.

ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த நிலையில் அவரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், மற்றும் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த தலைவர்கள் வரவேற்றனர். கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை வரவேற்க செல்லவில்லை.

இந்த சூழலில் தமிழக பாஜக கூட்டணி குறித்து முக்கிய விவாதங்களையும் ஆலோசனைகளையும் நடத்த இருக்கிறது.
இதற்காக பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளரான பி. எல். சந்தோஷ் வரும் ஜனவரி 12ஆம் தேதி சென்னை வருகிறார்.

கமலாலயத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு  கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி முறை சென்னை வந்த பி. எல். சந்தோஷ் அப்போது கமலாலயத்தில் நடந்த மையக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அந்த கூட்டத்தில், ‘நமக்கு தேசிய அளவில் எதிரி காங்கிரஸ். மாநில அளவில் எதிரி திமுக. இதன்படி செயல்படுங்கள்’ என்று அறிவுரை சொல்லிச் சென்றார், இது குறித்து மின்னம்பலத்தில்  ‘பாஜகவின் எதிரி யார் சந்தோஷ் சொன்ன டெல்லி மெசேஜ் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற நிலையில் பி.எல். சந்தோஷ் தமிழ்நாடு வந்து கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது,

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

CM ஆக நடிக்கும் ஜீவா : யாத்ரா 2 டீசர் இதோ!

“ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் வருது” : நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதில்!

BJP alliance with whom?

+1
1
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0