நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் இன்று (மார்ச் 20) தொடங்கியுள்ளது. இந்தநிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தீவிரம் காட்டி வருகின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ,புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
பாஜக கூட்டணியில் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று (மார்ச் 19) தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தநிலையில், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பாஜக தொகுதி பங்கீட்டு குழுவுடன் கமலாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “தொடர்ந்து பாஜகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்துவோம். அனைத்து கூட்டணி கட்சிகளும் வெல்ல வேண்டும் என்ற தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் மிக நுட்பமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இறுதி முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Purananooru: சூர்யா – சுதா கொங்கரா படம் கைவிடப்பட்டதா?… பின்னணி என்ன?
தாமரை சின்னத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!