அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து வெளியான அறிக்கையைத் திருத்தி அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அதிமுக தலைவர்களுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே நீண்ட நாட்களாக வார்த்தை மோதல் முற்றி வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 25) சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய முடிவை எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இனி பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என அதிமுக அறிவித்திருக்கிறது.
இதற்காக முதலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட அறிவிப்பில், பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
பாஜக கூட்டணி என்பதற்குப் பதிலாக வெறும் பாஜக என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இது விமர்சனத்துக்கு உள்ளானது.
“தேஜ கூட்டணியிலிருந்து விலகுவது சரி, அது எப்படி பாஜகவிலிருந்து விலகுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதிமுக பாஜக ஒரே கட்சியாக இருந்ததா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
பாஜகவில் இருந்து அதிமுக விலகல்.
தங்களை பாஜகவாகவே நினைத்து வாழ்ந்திருக்கிறார்கள். pic.twitter.com/IZhoHyR80j— Sam Ponraj (@ArchitectSam76) September 25, 2023
இந்தசூழலில், முதலில் வெளியிட்ட அறிக்கையைத் திருத்தி பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரியா
மனம் புண்படும் வகையில் அண்ணாமலை பேசமாட்டார்: வி.பி.துரைசாமி