மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மதுரை தொகுதியில் காலை முதலே திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார்.
தற்போது 13ஆம் சுற்று முடிவில் அவர் 2,95,373 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் 1,47,488 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 63,173 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேரளாவில் கணக்கை தொடங்கும் பாஜக!
பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி!