2024 மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது.
64.2 கோடி பேர் வாக்களித்ததாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணியான தெலுங்கு தேசம் கட்சி 16, ஐக்கிய ஜனதா தளம் 12, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) – 7, லோக் ஜன சக்தி கட்சி (ராம் விலாஸ்) – 5, ஜனசேனா கட்சி -2, மதச்சார்பற்ற ஜனதா தளம் -2, ராஷ்டிரிய லோக் தளம்-2, அசாம் கன பரிசத் – 1, என்.சி. பி (அஜித் பவார்) -1, ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் -1,மதசார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா – 1, அப்னா தளம் -1, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் – 1 என என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணி
காங்கிரஸ் – 99, சமாஜ்வாதி கட்சி -37, திரிணமூல் காங்கிரஸ் – 29, திமுக -22, சிவசேனா (உத்தவ் தாக்கரே) – 9, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) – 8, ராஷ்டிரிய ஜனதா தளம்- 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 3, ஆம் ஆத்மி -3, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -3, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் -2, விசிக -2, சிபிஐ-2, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி -2, கேரளா காங்கிரஸ் – 1, ராஷ்ட்ரீய லோக் தந்த்ரிக் கட்சி -1, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி -1, பாரத ஆதிவாசி கட்சி -1, மதிமுக -1 என 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 32 இடங்கள் தேவைப்படுகிறது. 272 இடங்களில் வெற்றி பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இம்முறை ஆட்சி அமைக்க உள்ளது.
மறுபக்கம் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு, நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 World Cup 2024: வெற்றி பெரும் அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவு கோடியா?
டஃப் பைட் கொடுத்த அதிமுக, அமமுக: அசராத திமுக
கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் – பருப்பு அரைத்த குழம்பு
கோவை : கணபதி ராஜ்குமார் வெற்றி … அண்ணாமலைக்கு பின்னடைவு!