பிகார் ஆட்சி மாற்றம் : நிதிஷ்குமார் – தேஜஸ்வி சொல்வதென்ன?

அரசியல்

பிகார் முதல்வராக 9வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், முதல்வர் நிதிஷ்குமாரும், முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவும் அதிரடி கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி உடனான  உறவை முறித்துக்கொண்ட பிகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் இன்று காலை ஆளுநர் அர்லேகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதனைத்தொடர்ந்து  மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டது.

8 பேர் பதவியேற்பு!

அதனைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் மாலையில் பாஜக ஆதரவுடன் 9வது முறையாக பிகார் முதல்வராக  நிதிஷ்குமார் பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

இவர்களுடன் பாஜகவை சேர்ந்த பிரேம் குமார் மற்றும் ஜேடியுவை சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவோன் குமார் மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலைவரான சந்தோஷ் குமார் சுமன் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ சுமித் குமார் சிங் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இனி வேறு எங்கும் கிடையாது!

முதல்வராக பதவியேற்ற பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார் பேசுகையில், “”நாங்கள் பிகாரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம். அதையே தொடர்ந்து செய்வோம். தேஜஸ்வி எதுவும் செய்யவில்லை. இப்போது நான் முன்பு இருந்த இடத்திற்கு (பாஜக கூட்டணி) திரும்பிவிட்டேன், இனி வேறு எங்கும் செல்வதற்கான கேள்வியே இல்லை” என்று நிதிஷ் குமார் கூறினார்.

நிதிஷ் குமார் கட்சிக்கு முடிவு வரும்!

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “நாங்கள் (ஆர்.ஜே.டி) நிதிஷ்குமாரை விட்டு விலகவில்லை, அவர் தான் எங்களை விட்டு விலகி, மகாகத்பந்தனைக் கொன்றுள்ளார். கூட்டணி தர்மத்தை நாங்கள் பின்பற்றினோம் ஆனால் அவர் பின்பற்றவில்லை.

உண்மையான ஆட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. வரக்கூடிய நாட்களில் இன்னும் நிறைய நடக்கும். எங்கள் திட்டங்களை நாங்கள் இப்போது வெளியிட விரும்பவில்லை. ஆனால் 2024ம் ஆண்டுடன் நிதிஷ் குமார் கட்சியின் (JDU) ஆட்டம் முடிவுக்கு வரும் என்பது உறுதி” என்று தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோப ஜெமா

Australia Open : சாம்பியன் பட்டம் வென்று இத்தாலி வீரர் சாதனை!

ஸ்டார் பட அப்டேட்: கவினின் ‘ஜிமிக்கி’ இவர்தான்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *