பீகார் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஜேடியு ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார்.
ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
243 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பீகாரில், மகாபந்தன் கூட்டணிக்கு மொத்தம் 164 ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் உரையாற்றிய சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மகாபந்தன் கூட்டணியின் பெரும்பான்மைக்கு பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து. அவையை பிற்பகல் 2.00 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
முன்னதாக பாஜகவை சேர்ந்த சின்ஹா, ”ஆளும் ‘மகாபந்தன்’கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று சின்ஹா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
நிதிஷ்குமார் அரசு மீது வாக்கெடுப்பு: கூட்டணி கட்சியினர் வீடுகளில் ரெய்டு!