மு.க.ஸ்டாலினை அண்ணா என அழைத்த தேஜஸ்வி

Published On:

| By Kavi

பீகாரின் துணை முதல்வராகத் தேஜஸ்வி பொறுப்பேற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், அண்ணா என்று அழைத்து நன்றி தெரிவித்துள்ளார் தேஜஸ்வி.

பீகார் அரசியலில் கடந்த இரு நாட்களாகப் பரபரப்பு நிலவியது. பீகாரிலும் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக முதல்வர் நிதிஷ்குமார் தரப்பு குற்றம்சாட்டியது. இதனால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்தார். தனது பதவியை ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ பதவியேற்றார்.

இந்நிலையில் நிதிஷ்குமாருக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், “நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் , உரிய நேரத்தில் பீகாரில் மீண்டும் மகா கூட்டணி அமைந்துள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த ட்விட்டை நேற்று இரவு ரீட்வீட் செய்துள்ள தேஜஸ்வி யாதவ், நன்றி அண்ணா. பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். அவர்களுக்கு இன்று முதல்பின்னடைவு தொடங்குகிறது” என நன்றி தெரிவித்துள்ளார்.

பிரியா

பீகார் புதிய அமைச்சரவை: யார் யாருக்கு எந்த துறை?