பிகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நிதிஷ்குமார் இன்று (ஜனவரி 28) ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பிகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
இந்தநிலையில், ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நிதிஷ்குமார் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று இரண்டாவது நாளாக நிதிஷ்குமார் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க நிதிஷ்குமாருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பிகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், “முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மாநிலத்தில் ஆட்சியை கலைக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணியில் சில ஸ்பீட் பிரேக்கர்கள்: ஜெய்ராம் ரமேஷ்
லியோ: லோகேஷ் கனகராஜை எச்சரித்த எஸ்.ஏ.சந்திரசேகர்