இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன் என பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (ஜனவரி 31) விளக்கம் அளித்துள்ளார்.
பிகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி பாஜக ஆதரவுடன் 9வது முறையாக பிகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன் என நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அவர்கள் ஏற்கனவே அதை முடிவு செய்து விட்டார்கள். கூட்டணிக்காக நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஒன்று கூட செய்யவில்லை.
எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை கூட அவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அதனால் தான் அவர்களை விட்டுவிட்டு முதலில் நான் யாருடன் இருந்தேனோ அவர்களிடம் திரும்பி விட்டேன். பிகார் மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை!
திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு: பணிப்பெண் பதிலளிக்க உத்தரவு!