பிகாரில் இட ஒதுக்கீடு உயர்வு மசோதா நிறைவேற்றம்!

அரசியல்

பிகார் மாநில சட்டமன்றத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா இன்று (நவம்பர் 9) நிறைவேற்றப்பட்டது.

பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பிறகு சாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களை நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு நவம்பர் 7-ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

அப்போது பிகாரில் தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவிகித இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

அதன்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகவும், பட்டியலின மக்களுக்கு 13 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகவும், பழங்குடியினர்களுக்கு 2 சதவிகிதம், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் என 75 சதவிகித இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று அறிவித்தார்.

இந்தநிலையில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா பிகார் மாநில சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறை பிகார் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீலகிரியில் கொட்டும் மழை : மண் சரிவு, உருண்டு விழுந்த பாறைகள்!

அதிமுக வேஷ்டி கட்டுவது தனிப்பட்ட விருப்பம்: வைத்திலிங்கம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *