சேலம் மாநாட்டின் மிகப் பெரிய பலம் நேருதான்: உதயநிதி ஓப்பன் டாக்!

அரசியல்

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க இளைஞரணி சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  திமுகவின் முதன்மைச் செயலாளரும் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேருதான் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று (நவம்பர் 20) சேலம் பெத்தநாயக்கன் பாளையத்துக்கு சென்ற அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார், மலையோரம் அமைந்துள்ள ரம்யமான பகுதியில் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள இடத்தில் தஞ்சாவூர் பந்தல் சிவா தலைமையில் பந்தல் அமைக்கும் ஏற்பாடுகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று மாலை அங்கே சென்ற அமைச்சர் நேரு மாநாட்டுப் பந்தலை அதன் அமைப்பாளர் பந்தல் சிவாவுடன் சேர்ந்து பார்வையிட்டார். பந்தலின் முகப்புப் பகுதி, உட் பகுதி, மேடை பகுதி என்று பகுதி பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு ஏரியாவிலும் எப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று கூறினார் நேரு. ஒரு கட்டத்தில் பந்தலின் ஒவ்வொரு பகுதியும் திட்டமிட்டப்படி நீள அகலத்தைக் கொண்டிருக்கிறதா என்று டேப்பும் கையுமாக இறங்கி அளந்து சரிபார்த்துக் கொண்டார் நேரு. அமைச்சர் நேருவின் ஆய்வின்போது மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட 23 குழுக்களின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதியும் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மாநாட்டு ஏற்பாடுகள் பற்றி அமைச்சர் நேரு தலைமை உரையாற்றினார். அதன் பின் பேசிய அமைச்சர் உதயநிதி, “மாநாடு என்­பது அடிக்­கடி நடை­பெ­று­வது அல்ல. எப்­போ­தா­வது ஒரு­மு­றை­தான் நடை­பெ­று­கி­றது. நம் இளை­ஞர் அணி­யின் மாநில மாநாடு 16 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இப்­போ­து­தான் நடை­பெ­று­கி­றது. அந்த சம­யத்­தில் நாம் இளை­ஞர் அணி­யில் இருக்­கி­றோம் என்­பதே நமக்­கான பெருமை. அது­வும் இந்த மாநாட்­டுப் பணி­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக தலை­மைக் கழ­கத்­தால் அறி­விக்­கப்­பட்ட குழுக்­க­ளில் நாம் இடம்­பெற்­றி­ருக்­கி­றோம் என்­பது கூடு­தல் பெருமை. சேலத்­தில் நடை­பெற உள்ள இளை­ஞர் அணி மாநாடு, நம் இளை­ஞர் அணி­யின் பெரு­மையை, கழ­கத்­தின் கட்­ட­மைப்பை இந்­திய ஒன்­றி­யமே உணர்ந்­து­கொள்­ளும் வகை­யில் நடை­பெற இருக்­கி­றது.

100 பேர் கூடும் தெரு­மு­னைப் பிரச்­சா­ரக் கூட்­டத்­துக்கே, பேச்­சா­ள­ராக யாரை அழைக்­க­லாம், என்ன தலைப்­பின் கீழ் அவரை பேச வைக்­க­லாம், பின்­ன­ணி­யில் ஃப்ளெக்ஸ் வைக்­க­லாமா, எல்­இடி வைக்­க­லாமா? அப்­படி வைக்­கப்­ப­டும் ஃப்ளெக்ஸ் பேன­ரில் என்­னென்ன வாச­கங்­கள் இடம் பெற வேண்­டும், உள்­ளூர் கட்சி நிர்­வா­கி­க­ளுக்கு முறை­யாக தக­வல் தெரி­விப்­பது, மீடி­யா­வுக்கு தக­வல் சொல்­வது, துண்­ட­றிக்கை தயார் செய்­வது… என பல்­வேறு விஷ­யங்­களை திட்­ட­மி­டு­வோம். அப்படி என்­றால், லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் கூடும் நம் இளை­ஞர் அணி மாநில மாநாட்­டுக்­கான ஏற்­பா­டு­கள் எந்­த­ள­வுக்கு நேர்த்­தி­யாக திட்­ட­மி­டப்­பட வேண்­டும் என்­பதை நீங்­கள் அனை­வ­ரும் உணர்ந்­தி­ருப்­பீர்­கள்.
மாநாட்­டுக்­கான பணி­களை நாம் அனை­வ­ரும் இணைந்­து­தான் செய்­யப்­போ­கி­றோம். ஆனால் இந்­தப் பணியை அவர் பார்த்­து­வி­டு­வார், இவர் பார்த்­துக்­கொள்­வார் என்று இருந்து எந்­தப் பணி­யும் விடு­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் இந்­தக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஒவ்­வொரு குழு­வின் பணி என்ன என்­பது குறித்து உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் அன்­ப­கத்­தின் மூலம் தெளி­வாக தெரி­விக்­கப்­பட்டு அது­கு­றித்து விளக்­கிக் கூறப்­பட்டு உள்­ளது” என்ற உதயநிநி தொடர்ந்து பேசுகையில்,

“இந்த மாநாட்டை நடத்­து­வ­தற்கு நமக்கு மிகப்­பெ­ரிய பல­மாக முதன்­மைச் செய­லா­ளர் அண்­ணன் நேரு அவர்­கள் உள்­ளார்­கள். பல மாநாட்டை நடத்­திய அனு­ப­வம் அவ­ருக்கு உள்­ளது. இதில் நாம் என்ன தவறு செய்­வோம் என பலர் காத்­தி­ருக்­கி­றார்­கள். அத­னால் விமர்­ச­னத்­துக்கு இட­ம­ளிக்­கா­மல், இந்த மாநாட்டை வெற்­றி­க­ர­மாக நடத்­திக்­காட்ட வேண்­டிய பொறுப்பு நம் அனை­வ­ருக்­கும் உள்­ளது. மாநாட்­டுப் பணி­கள் குறித்து உங்­க­ளுக்கு என்ன சந்­தே­கம் இருந்­தா­லும் அமைச்­சர் நேரு அண்­ணன் அவர்­க­ளை­யும், அங்­குள்ள மாவட்­டச் செய­லா­ளர்­க­ளி­ட­மும், அன்­ப­கத்­தி­லும் நீங்­கள் கேட்­டுத் தெளிவு பெற­லாம்.” என்று பேசினார் உதயநிதி.

சேலம் இளைஞரணி மாநாட்டை ஒட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை உதயநிதி நடத்தி வருகிறார். அந்த வகையில் 22 ஆம் தேதி காலை சேலத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
அதற்கு முன் இன்று நவம்பர் 21 ஆம் தேதி ஈரோடு வடக்கு – தெற்கு மாவட்டக் கழக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார் உதயநிதி. அங்கிருந்து இன்று மாலை சேலம் செல்கிறார். மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் நேருவுடன் சேர்ந்து பார்வையிட இருக்கிறார் உதயநிதி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

பிக்பாஸ்: ஜோவிகாவிற்கு சீக்ரெட் மெசேஜ் அனுப்பிய வனிதா விஜயகுமார்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *