அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று ஓமந்தூரார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி , நெஞ்சுவலி காரணமாக இன்று (ஜூன் 14) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை இன்று (ஜூன் 14) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு(47) இருதய ரத்த நாள பரிசோதனை இன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா