இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் , கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை தொடங்கினார்.
இந்த நடைபயணம் காஷ்மீர் வரை நடைபெறவுள்ளது. தற்போது ஹரியானா மாநிலத்தில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த யாத்திரையை தொடக்கம் முதலே பாஜக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டிக் கொண்டிருப்பதாகவும் சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் என்றும் மருத்துவ துறை வல்லுநர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், மத்திய அரசும், அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா பரவல் அபாயம் தொடர்பான அறிவுறுத்தல்களை விடுத்திருக்கிறது.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலட் ஆகியோருக்கு நேற்று (டிசம்பர் 20) ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கொரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முக கவசம் அணிய வேண்டும்.
பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் முன்பும், கலந்து கொண்ட பின்பும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லை எனில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையையே ஒத்திவைக்க வேண்டும் என மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
கொரோனா பரவல் என்ற காரணத்தை முன்வைத்து ராகுல் காந்தியின் பாதயாத்திரையை மத்திய அரசு தடுக்கப் பார்க்கிறது என்றும் குஜராத் தேர்தலின் போது மோடி கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதது ஏன் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பதவி விலகத் தயார்: எலான் மஸ்க் போட்ட கன்டிஷன்!
சென்னைக்கு வந்த ஹாக்கி உலகக் கோப்பை: வாழ்த்திய முதல்வர்