’தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி’ தேசியக் கட்சியாக மாறிய நிகழ்வில் திருமாவளவனிடம் அக்கறையுடன் விசாரித்துள்ளார் அம்மாநில முதல்வரான சந்திரசேகர் ராவ்.
பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர் ராவ், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், பாஜகவுக்கு மாற்றாக தேசிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க இருப்பதாகக் கூறி வந்த சந்திரசேகர் ராவ், இதற்காக விஜயதசமி தினமான அக்டோபர் 5 இல் தனது கட்சியின் பொதுக்குழுவை தலைநகர் ஹைதராபாத்தில் கூட்டினார்.
இந்த கூட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தன் கட்சியின் பெயரான ’தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’யை, ’பாரத் ராஷ்டிர சமிதி’ என மாற்றுவதற்கான தீர்மானத்தை கே.சந்திரசேகர் ராவ் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, கட்சியின் பெயர் இனி ’பாரத் ராஷ்டிர சமிதி’ என அழைக்கப்படும் என்றும், இது தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மதரீதியாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் காணும் பாஜகவுக்கு மாற்றாக பாரத் ராஷ்டிர சமிதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கட்சி தேசிய அளவில் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டது பற்றியும் கேசிஆர் தன்னிடம் பேசியது பற்றியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”உங்கள் சகோதரன் இங்கே இருக்கிறேன். ஹைதராபாத் உங்கள் இல்லம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்; என்னைச் சந்திக்கலாம். பாஜகவைப் பற்றி பயம் வேண்டாம். அவர்களை எளிதில் வீழ்த்தலாம். நாம் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு முதல்வர் என்னை ஊக்கப்படுத்தினார். வட இந்தியத் தலைவர்கள் உடனிருந்தனர்” என
ஜெ.பிரகாஷ்
முட்டி மோதியும் கிடைக்காத மாசெ பதவி: பிடிஆர் விரக்தி பின்னணி!