ராகுல் நடைபயணம்!
ராகுல் காந்தி இன்று (டிசம்பர் 16) ஒற்றுமை நடைபயணம் 100-வது நாளை ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் துவங்கி கிரிராஜ் தரன் மந்திர் கோவில் பகுதியில் நிறைவு செய்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் நடைபாதை!
சென்னை மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நடைபாதை சீரமைக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது.
பேராசிரியர் நூற்றாண்டு விழா!
தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
காசி தமிழ் சங்கமம் நிறைவு!
வாரணாசியில் நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கனக்ட் பாடல் அப்டேட்!
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் கனக்ட் திரைப்படத்தின் நான் வரைகிற வானம் பாடல் இன்று வெளியாகிறது.
வேலை வாய்ப்பு முகாம்!
சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா!
மதுரையில் இன்று நடைபெறும் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 209-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவதார் படம் வெளியீடு!
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு கூடுதல் அவகாசம்!
அதிக முறை போக்குவரத்து விதிமீறல் கேமராவில் சிக்குவோரை நேரில் அழைக்கும் சென்னை காவல் துறை!