மோடி படத்தை ஒட்டியவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? கே.எஸ்.அழகிரி கேள்வி!

அரசியல்

“செஸ் ஒலிம்பியாட் விளம்பர படத்தில், மோடி படத்தை ஒட்டியவர்களை காவல் துறை ஏன் கைது செய்யவில்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 28) சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு கவனித்துவரும் வேளையில், இதன் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. என்றாலும் பிஜேபியினர் அந்த விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் மோடி படத்தையும் இணைத்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த வீடியோ வைரலானதால் பலரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு மை கொண்டு மோடி படத்தை அழித்தனர். இந்த செயலை செய்ததற்காக மூன்று பேர் காவல்துறையினரால் நேற்று (ஜூலை 28) கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பாஜகவினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிரவைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.