உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி!

அரசியல்

சென்னையில் தொடங்கியுள்ள உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் நேற்று(ஆகஸ்ட் 12) உணவுத்திருவிழா தொடங்கியது. உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 நாட்களுக்கு இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.

சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022′ என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

alt="Beef biryani is allowed at the chennai food festival"

உணவுத் திருவிழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு ஏன் அமைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால், இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கேட்காததால் அரங்கு அமைக்கப்படவில்லை” என்றார்.

alt="Beef biryani is allowed at the chennai food festival"

இந்தநிலையில் உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார்.

பீப் பிரியாணிக்கு 3 கடைகள் அனுமதி கேட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று மாலை பீப் பிரியாணி விற்பனையை நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

கலை.ரா

இஞ்சி விலை உயர்வு : மற்ற காய்கறிகளின் விலை பட்டியல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *