பாஜக எஸ்.சி.,எஸ்.டி பிரிவு மாநில பொருளாளர் பிபிஜி சங்கர் கொலை வழக்கில் 9 பேர் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 28) சரணடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊரைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர். பாஜக மாநில எஸ்.சி., எஸ்.டி., பிரிவு பொருளாளராகவும் வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவராகவும் உள்ளார். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
நேற்று இரவு பிபிஜி சங்கர் சென்னையில் இருந்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் மர்ம நபர்கள் அவரது காரை வழிமறித்து நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் சரமாரியாக தாக்கினர். இதனால் சம்பவ இடத்திலேயே பிபிஜி சங்கர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை காவல்துறையினர் பிபிஜி சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகளை பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் பிபிஜி சங்கரை கொலை செய்த சரத், குமார், ஜெகன், சஞ்சீவ், குணா, ஆனந்த், சாந்தகுமார், தினேஷ், உதயகுமார் ஆகிய 9 பேர் எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிபதி சக்திவேல் முன்னிலையில் இன்று ஆஜரானார்கள்.
செல்வம்
”காதலுக்கு மரியாதை”: நடிகை கஸ்தூரிக்கு ரஹ்மான் பதில்!
மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அறிவிப்பு!