Barrage across the Spider River - Condemned by EPS

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை – ஈபிஎஸ் எதிர்ப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 19) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் தமிழக பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது . இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘பவர்ஃபுல்’ பங்கு! மார்க்கெட்டில்‌ அசத்தும் ‘மகா ரத்னா’!

ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து – காரணம் தெரியுமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts