இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 25

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 25

கறுப்புக் கோட்டுகளும் காக்கிச் சட்டைகளும்!

வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடக்கும் மோதல் என்பது தமிழகத்தில் நீண்டகாலமாக ஓர் ஆறாத வடுவாகவே இருக்கிறது. நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்டும் இந்த இரு பெரும் துறையினரும் ஒருவருக்கொருவர் எதிரியா என்ற கேள்வியை இன்றைய சமூகத்தில் நாம் நிதர்சனமாகவே பார்க்கிறோம்.

தமிழகத்தில் உத்தேசமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பகுதியில் இதுபோன்ற வழக்கறிஞர் – போலீஸ் மோதல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்குமான மோதலை தமிழ்நாடு லைவ் ஆக பார்க்கும் ஒரு துரதிர்ஷ்டம் கிடைத்தது.

சில வாரங்களுக்கு முன் நெல்லை மாவட்டத்தில் வழக்கறிஞர் செம்மணி என்பவரை பணகுடி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு என்று சொல்லி அழைத்துச்சென்று கடுமையாகத் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து நெல்லை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இது, மிக அண்மையில் வழக்கறிஞர் – காவல் துறையினருக்கு இடையேயான முறுகல் நிலைக்கான உதாரணம்.

Bar Council of India and Lawyers Mini Series 25

**ஏன் இந்த மோதல்கள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க வழியே இல்லையா?**

பார் கவுன்சில் தலைவராக இருந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.சந்திரமோகனிடம் கேட்டோம். அவர் பதில் என்ன?

“காவல் துறை சகோதர்களும் நம்முடைய அதாவது வழக்கறிஞர்களுடைய உறவினர்கள்தான், நம்முடைய நண்பர்கள்தான், நம்முடைய மக்கள்தான். அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தோ, சிந்தனையோ கிடையாது. நம் குடும்பத்தில் இருந்துதான் அவர்கள் போயிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு விஷயம், இதைச் சொல்ல நான் தயங்கவில்லை. ‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்ற அந்த மூன்று வார்த்தைகள் இப்போது வரைக்கும் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருக்கின்றன. காவல் துறையினரால் அந்த மூன்று வார்த்தைகளை எழுதி வைக்கவோ, வாசிக்க வைக்கவோ முடிகிறதே தவிர, காவல் துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தைகளுக்கு அவர்களால் உயிர் கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு சென்று ஒரு பிரச்னை தொடர்பாகவோ, விவகாரம் தொடர்பாகவோ பேசினாலே அவர்களை காவல் துறையினரின் எதிரியாகச் சித்திரிக்கும் ஒரு நிலை உருவாகியிருக்கிறது. வழக்கறிஞர்களில் மிகப் பெரும்பாலானோர் அதாவது 99.99 சதவிகிதத்தினர் தங்களது சொந்தப் பிரச்னைகளுக்காகக் காவல் நிலையத்துக்கோ, காவல் துறை அலுவலங்களுக்கோ செல்வதில்லை. பாதிக்கப்பட்ட குடிமகனின் சட்டக் குரலாக, பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் தேடும் நபராகத்தான் வழக்கறிஞர்கள் காவல் துறையினரிடம் அணுகுகிறார்கள்.

ஆனால், காவல் துறை அன்பர்கள் வழக்கறிஞர்களை மதிக்கக் கூடாது என்பதில் முடிவாக இருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு பட்டப் படிப்புகள் படித்துவிட்டு வழக்கறிஞராகி இருப்பவர்களுக்குக் குறைந்தபட்ச மரியாதை கூட தரக் கூடாது என்பதில் காவல் துறையினர் கண்ணுங்கருத்துமாக இருக்கின்றனர் என்பதுதான் வேதனையான உண்மை.

ஏன் இந்த அணுகுமுறை? ஏன் இந்த வெறுப்பு? ஏன் இந்த சிந்தனை? ஏன் இப்படி ஒரு சேடிஸ்ட் மனப்பான்மை, காவல் துறை அதிகாரிகளுக்கெல்லாம் இருக்கிறது என்பதை என்னால் சிந்திக்கவே முடியவில்லை. நான் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறேன். இளம் வழக்கறிஞராக இருந்து அனுபவம் பெற்று பார் கவுன்சில் தலைவராகவும் இருந்திருக்கிறேன். எனக்கு காவல் துறையினரோடு கள ரீதியாக நிறைய அனுபவம் இருப்பதால்தான் இதையெல்லாம் சொல்லுகிறேன்.

வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களுக்குச் சென்றாலே அவமதிக்கப்படுகிறார்கள், வெறுக்கப்படுகிறார்கள், ஏன் தாக்கவும் படுகிறார்கள்.

ஆனால், காவல் துறையினர் நீதிமன்றத்துக்குப் பல்வேறு பணிகளுக்காக வருகிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றங்களில் இதுபோன்ற எந்த பிரச்னைகளும் வருவதில்லை. அவர்கள் தங்கள் பணியை செய்ய எந்த இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் காவல் துறை அதிகாரிகளோ, காவல் துறையினரோ நீதிமன்றங்களுக்கு வரும்போது காவல் துறையினருக்கே பாதுகாப்பாகத்தான் வழக்கறிஞர்கள் நடந்துகொள்கிறார்கள்” என்றார் சந்திரமோகன்.

பின் எதனால் இந்த மோதல் போக்கு? காவல் துறை – வழக்கறிஞர் மோதலைத் தடுக்க நீங்கள் வழக்கறிஞர் சங்க தலைவராக இருந்தபோது முன்னெடுப்புகள் ஏதும் மேற்கொண்டீர்களா?

“ஆம். வழக்கறிஞர் – காவல் துறை பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர நான் எனது நிர்வாகத்தில் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுத்தேன்” என்று சொல்லத் தொடங்கினார் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.சந்திரமோகன்.

அவற்றை திங்கட்கிழமை பார்ப்போம்.

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 16

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 17

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 18

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 19

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 20

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 21

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 22

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 23

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 24

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share