இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 23

அரசியல் சிறப்புக் கட்டுரை

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 23

நீதிமன்றப் புறக்கணிப்பு ஒரு தீர்வா?

காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நிலவும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்தந்த நகரம், மாவட்டம் என மாநில அளவு வரை நீதிபதி தலைமையில் காவல் துறையினர், வழக்கறிஞர் சங்கத்தினர் உறுப்பினர்களாகக் கொண்ட குழுக்களை அமைத்து, இந்த நீண்ட கால நெருப்பை அணைக்க ஆக்கபூர்வமாகப் பணியாற்றினார் முன்னாள் பார் கவுன்சில் தலைவர் ஆர்.கே.சந்திரமோகன். அது பற்றி அவர் விரிவாகப் பேசினார்.

போலீஸார் வழக்கறிஞர்களைத் தாக்குகிறார்கள் என்பது தவறுதான். தவிர்க்கப்பட வேண்டியதுதான். அதேநேரம் ஏதோ ஓர் இடத்தில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படும் நிலையில் அதற்காக ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் திரண்டு கோர்ட்டு புறக்கணிப்பு, வேலை நிறுத்தம் என்று இறங்குதல் சரியா? இந்தக் கேள்வியை உயர் நீதிமன்ற நீதிபதியே அண்மையில் எழுப்பினார்.

கடந்த நவம்பர் மாதம் தேனி மாவட்ட நீதிமன்றத்தில், புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தின் திறப்பு விழா நடந்தது. அந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் குத்து விளக்கு ஏற்றி நீதிமன்றப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், திரளான வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பேசிய நீதிபதி புஷ்பா சத்யநாராயணன், வழக்கறிஞர்களுக்குச் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டினார்.

“மாவட்ட நீதிமன்றங்களுக்கு உள்ள பெரிய சிறப்பம்சமே மக்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புள்ள நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள்தான். உயர் நீதிமன்றங்களில் ஆவணங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், மாவட்ட நீதிமன்றங்களில்தான் மக்கள் பேசுகிறார்கள், மக்களுடன் பேச முடியும்.

தேனியில் கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தைத் தொடங்குவதற்குக் காரணம் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்வதால் மேலும் மேலும் வழக்குகள் தேங்கிவிடுகின்றன. இதனால் நீதித் துறையின் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர்த்து, நீதி மன்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நீதித்துறையின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும்” என்று குறிப்பிட்டார் உயர் நீதிமன்ற நீதிபதி.

இப்போது இருக்கும் நிலையில் நீதிமன்றங்கள் தங்களுக்கு உரிய கால அளவைவிட அதிக நேரம் செயல்பட்டால்கூடத் தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளைத் தீர்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். இப்படி இருக்க எதிர்பாராத நேரங்களில் எல்லாம் ஏதேதோ காரணங்களை முன்வைத்து நீதிமன்றத்தைப் புறக்கணிப்பு செய்கிறோம் என்று வழக்கறிஞர் சங்கங்கள் அறிவிப்பது சரியா

என்று மூத்த வழக்கறிஞரும் முன்னாள் பார் கவுன்சில் தலைவரான ஆர்.கே.சந்திரமோகனிடம் கேட்டோம்.

Bar Council of India and Lawyers Mini Series 23

“நான் மனம் திறந்து சொல்கிறேன். இந்த விஷயத்தில் என் தனிப்பட்ட அபிப்ராயம் என்னவென்றால், நீதிமன்றப் புறக்கணிப்புக்கு நூறு சதவிகிதம் எதிரானவன் நான். எதிரானவன் என்பதை விட எதிரி என்றே என்னை சொல்லிக்கொள்கிறேன்.

ஒரு போலீஸ்காரர், ஒரு வழக்கறிஞரை அவமதித்துவிட்டார் என்பதாலோ, தாக்கிவிட்டார் என்பதாலோ உடனே வேலை நிறுத்தம் என்று இறங்கும் வழக்கறிஞர்களை எல்லாம் பார்த்து நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான்: ‘‘ஊரில் யாருக்கு பிரச்னை என்றாலும் அதைத் தீர்த்து வைப்பதற்கு நம்மிடம் (வழக்கறிஞர்களிடம்) தான் வருகிறார்கள். ஆனால், வழக்கறிஞர்களான நமக்கு ஒரு பிரச்சினை என்றதுமே உடனே ரோட்டுக்குப் போவதும் போராட்டம் செய்வதும் ஏற்புடையதா? மற்றவர்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க கோர்ட்டுக்குப் போவோம். நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கோர்ட்டுகளைப் புறக்கணித்துவிட்டு ரோட்டுக்கு வருவது நியாயமா?

ஒரு வழக்கறிஞருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தீர்த்து வைப்பதற்கு ஆறு வழிகள் இருக்கின்றன. அதில் தீர்வு கிடைக்காவிட்டால்தான் ரோட்டுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அந்த ஆறு வழிகளையும் எடுத்த எடுப்பிலேயே தவிர்த்துவிட்டு வேலை நிறுத்தம் என்று இறங்குவது எந்த அடிப்படையில் நியாயம்?” என்று கேட்கிறார் ஆர்.கே.சந்திரமோகன்.

தீர்வு காண்பதற்கான ஆறு வழிகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு நீதிமன்றத்தைத் துறந்து, சாலையில் இறங்கி போராடுவதால் பிரச்னை தீர்ந்துவிடுமா என்ற கேள்வியில் பல நியாயங்கள் இருக்கின்றன.

அது சரி… அந்த ஆறு வழிகள் என்ன?

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 16

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 17

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 18

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 19

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 20

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 21

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 22

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *