இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 20

அரசியல் சிறப்புக் கட்டுரை

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 20

‘இருட்டறையில் ஒரு விளக்கு’ என்ற தொடரின் மூலம் வழக்கறிஞர்கள் சங்கமான பார் கவுன்சில் பற்றியும், பார் கவுன்சில் தேர்தல் தள்ளிப் போவது பற்றியும் சில முக்கியமான பதிவுகளை மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் வாயிலாக இதுவரை பார்த்தோம்.

இனி மூத்த வழக்கறிஞர், தமிழ்நாடு பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர், மூன்றாவது முறையாக இப்போது பார் கவுன்சில் உறுப்பினர் எனத் தொடர்ந்து வழக்கறிஞராக நீதிமன்றத்திலும், வழக்கறிஞர்களின் பிரச்னைக் களத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற சந்திரமோகன் தன் பார்வையில் வழக்கறிஞர் உலகின் முக்கியப் பிரச்னைகளைப் பற்றி மின்னம்பலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

அவரோடு நம்முடைய உரையாடலைத் தொடங்குவோம்.

**பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்களுக்கு என்ன செய்கிறது? பார் கவுன்சில் தேர்தலில் என்னதான் பிரச்னை?**

“வழக்கறிஞர் தொழிலுக்கு அங்கீகாரத்தையே பார் கவுன்சில்தான் கொடுக்கிறது. சட்டம் படித்த ஒருவர் வழக்கறிஞராக பார் கவுன்சிலில்தான் பதிவு செய்ய வேண்டும். எனவே, வழக்கறிஞர் என்ற தொழிலுக்கான ஜீவ நாடியே அந்தந்த மாநில பார் கவுன்சில்தான்.

உயர் நீதிமன்றத்தின் எல்லைதான் பார் கவுன்சிலின் எல்லை. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இருப்பதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே பார் கவுன்சில் என்று அமைந்தது.

பார் கவுன்சில் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து பதிவு பெற்ற வழக்கறிஞர்களும் ஓட்டுப் போட வேண்டும். 25 மெம்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த 25 பேரிலிருந்து ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், டெல்லிக்கு அகில இந்திய பார் கவுன்சிலுக்கு ஒரு மெம்பர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். யாரெல்லாம் வழக்கறிஞர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை உண்டு.

Bar Council of India and Lawyers Mini Series 20

பார் கவுன்சிலுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்க வேண்டும். நமது தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு 2016லேயே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் நடக்கவில்லை. என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், இப்போது இருக்கிற அகில இந்திய பார் கவுன்சில் தேர்தலை விரும்பவில்லை. தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கான வாய்ப்புகள் சட்டத்திலேயே அவர்களுக்கு இருக்கின்றன.

ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலுக்கும் பதவிக் காலம் முடிந்துவிட்டது என்றாலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட காரணிகளுக்காக ஆறு மாதங்கள் தேர்தலைத் தள்ளிப் போடலாம். அடுத்த ஆறு மாதங்கள் தள்ளிவைக்க வேண்டுமென்றால் அந்த மாநில பார் கவுன்சில் நிர்வாகம் டெல்லியின் கைக்குப் போய்விடும். இந்தியாவில் எப்படி மக்களாட்சி நடக்கிறதோ அதேபோலத்தான் பார் கவுன்சில் ஆட்சியும் நடக்கிறது.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்வதுபோல அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் பதவிக்கு வருகிறவர்கள் அடுத்த தேர்தல் வரை அந்தப் பதவியில் இருப்பார்கள். மாநில பார் கவுன்சில்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிற உறுப்பினர்கள், அந்தந்த பார் கவுன்சில் பதவிக் காலம் முடிந்த கையோடு வீட்டுக்குப் போய்விடுவார்கள். இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், மாநில பார் கவுன்சில்களில் இருந்து அனுப்பப்படுகிற உறுப்பினர்கள் இல்லாததால் தலைவர் பதவியை என்ஜாய் பண்ணுகிறார்கள்.

அதாவது மாநில அரசு என்றால் கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவார்கள். பார் கவுன்சிலில் எப்படியென்றால் 8(ஏ) என்ற சட்டப் பிரிவின்படி ஒரு கமிட்டியைப் போட்டு அதில் இரு நிர்வாகிகளை நியமித்து மாநில பார் கவுன்சில்களைத் தங்கள் நேரடிப் பார்வையில் நடத்துகிறார்கள். இது எப்படியென்றால் ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி பண்ணுகிறார்கள்.

இந்த நிலையில்தான் போலி வழக்கறிஞர்களை நீக்குவதாகச் சொல்லித் தேர்தலைத் தாமதப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். போலி வழக்கறிஞர்கள் என்பதெல்லாம் வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் போலி வழக்கறிஞர்கள் என்றால் ஐந்து பேரோ, பத்து பேரோ, இருபது பேரோ இருக்கலாம். கல்லூரிக்கே போகாமல் வக்கீல் என்று சொல்லிக்கொண்டு கறுப்புக் கோட்டையும், கழுத்துப் பட்டையும் கட்டிக்கொண்டு போனான் என்றால் அவன் போலி வக்கீல்.

இந்தப் போலி வழக்கறிஞர்கள் உருவாகக் காரணம் யார் தெரியுமா?” என்று அதிரடியாகக் கேட்டார் சந்திரமோகன்.

யார் காரணம்?

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 16

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 17

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 18

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 19

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *