பார் கவுன்சில் தேர்தலில் கறை! மினி தொடர் – 18

அரசியல் சிறப்புக் கட்டுரை

இருட்டறையில் ஒரு விளக்கு – மினி தொடர் – 18

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு நடத்த வேண்டுமெனத் தெரிவித்திருக்கிறார் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன். அதோடு, பார் கவுன்சில் தேர்தலைத் தாமதப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், தற்போது சிறப்புக் குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கான உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (பார் கவுன்சில் தேர்தல் குறித்து, மின்னம்பலத்தில் வெளியாகும் [இருட்டறையில் ஒரு விளக்கு] தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்)

இந்நிலையில், இந்தத் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதியுள்ளார் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன். பார் கவுன்சில் தேர்தல் நடவடிக்கைகளில் கறை படிந்துள்ளதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்

“பார் கவுன்சிலின் தினசரி நடவடிக்கைகளைக் கவனிப்பதற்குத் தயாராகி வருகிறேன். அதனால், இந்தத் தேர்தலை நடத்தும் முழுப் பொறுப்பிலிருந்து விலக விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில் செயல்பட்டுவரும் பார் கவுன்சில் சிறப்புக் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது; பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் பல காரணங்களால் தாமதமாகிறது;

இது குறித்த உண்மையான காரணத்தை அறிவதற்கான உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் விஜய் நாராயணன், ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று மனன் குமாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் சுமார் 52 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆனால், இடைக்கால நிர்வாக கமிட்டியில் (அட் ஹாக் கமிட்டி) தமிழக பார் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

“பார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர்களுக்கான பின் கதவாக இது இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், கமிட்டி உறுப்பினர்களாக நீடிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பார் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு உறுப்பினர்களாக ஆர்.சிங்காரவேலன் மற்றும் சந்திரசேகரன் இருவரும் பிரபாகரனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.

இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்தாமல் தடை ஏற்படுத்தினர். இதனை நிராகரித்து, வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிடும்படி பார் கவுன்சில் செயலருக்கு விரிவான உத்தரவு பிறப்பித்தேன். அதனை சிறப்புக் குழுவில் இருப்பவர்கள் ஏற்கவில்லை. பெரும்பான்மையே முக்கியம் என்பதால், தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட விரும்புகிறேன்” என்று இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் விஜய் நாராயணன்.

“நாட்டின் நீதியமைப்பு என்பது முழுவதுமாக வழக்கறிஞர்களைச் சார்ந்தே உள்ளது. உடனடியாக இந்த அமைப்பில் மாற்றம் ஏற்படாவிட்டால், அது இந்த நாட்டுக்கு நன்மை பயக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 16

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 17

Bar Council of India and Lawyers Mini Series 18

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0