வங்கிக் கணக்கு முடக்கம்: உதயநிதி அறக்கட்டளை விளக்கம்!

அரசியல்

உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை என்று அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு தெரிவித்துள்ளார்.

உதயநிதி அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து 34.7 லட்சம் முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை கடந்த மே 27ஆம் தேதி அறிவித்தது.

அதில், கல்லல் குழும வழக்கில் தொடர்புடைய 36.3 கோடி ரூபாய் தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே முடக்கப்பட்டது.

தற்போது உதயநிதி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து 34.7லட்சம் ரூபாய் முடக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

லைகா நிறுவனத்தின் துணை நிறுவனமான பெட்டிகோ நிறுவனம், கல்லல் குழுமம் ரூ.114கோடி பண மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் இயக்குநர் சரவணன் பழனியப்பன் உள்ளிட்ட 2 பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பண மோசடி செய்த கல்லல் குழுமத்திடம் இருந்து 1 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதன் அடிப்படையில் உதயநிதி அறக்கட்டளை வங்கிக் கணக்கை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது.

இதுகுறித்து நேற்று(மே 29) இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு,

“அறக்கட்டளையின் வாயிலாக நாங்கள் செய்துள்ள நலப்பணிகளுக்கான வரவு- அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து வருகின்றோம்.

அமலாக்கத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் 27.05.2023அன்று வெளிவந்த பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது.

ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளைப் போல், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு, எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.

மேலும் அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இப்பொழுது அமலாக்கத் துறை முடக்கிய ரூபாய் 34.7லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, முழுக்க முழுக்க மக்களுக்காக களப்பணியாற்றுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

ரசிகர்களால் கண் கலங்கினேன்: தோனி நெகிழ்ச்சி!

தி கேரள ஸ்டோரி: கமலை வசைபாடிய இயக்குநர்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *