10 crore for udhayanidhi head

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி: அயோத்தி சாமியார்!

அரசியல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளார் அயோத்தி சாமியார் பரம்ஹன்ச ஆச்சார்யா.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசியிருந்தார். உதயநிதியின் பேச்சு தேசிய அளவில் விவாத பொருளாகியுள்ளது.

இருந்தாலும் “நான் பேசியதில் தவறு எதுவுமில்லை. திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருப்பேன்” என்று உதயநிதி உறுதியாக கூறி வருகிறார்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரம்ஹன்ச ஆச்சார்யா என்ற சாமியார் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.

உதயநிதியின் உருவப்படத்தைக் வாளால்  குத்தி எடுத்து தீயிட்டு எரித்தார். பின்னர் , “உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்குவேன். அவருடைய தலையை யாரும் கொண்டு வரவில்லை என்றால், நானே என் கைகளால் தலையை வெட்டுவேன். அதற்காக எனது வாளையும் தயார் செய்து வைத்துள்ளேன்” என்று அறிவித்துள்ளார்.

மோனிஷா

அமைச்சர் சேகர்பாபு ஏன் பதவி விலக வேண்டும்?: உதயநிதி கேள்வி!

காவல்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும்: அண்ணாமலை

ஸ்லீப் மோடுக்கு சென்ற விக்ரம் லேண்டர்!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *