அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. Ayodhya in festival circle
இதற்காக நாடு முழுவதிலும் இருந்தும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலதரப்பட்டவர்களும் அயோத்தியில் குவிந்து வருகிறார்கள்.
பிராணப் பிரதிஷ்ட்டா எனப்படும் சிலை நிறுவுதல் மற்றும் கும்பாபிஷேக விழாவுக்காக அயோத்தியில் 7000 விவிஐபிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் ராம் லல்லாவின் பிரான பிரதிஷ்டை திங்கள்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துறவிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இதற்காக காலையில் இருந்தே அயோத்தி கோயில் வளாகத்துக்கு முக்கிய பிரமுகர்கள் திரண்டனர்.
காலை 10.19 மணிக்கு உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகை தந்தார். அவருடன் துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் வந்தனர்.
தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நடிகைகள் மாதுரி தீட்சித், கத்ரினா கைஃப் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் வருகை தரத் தொடங்கினர்.
ஆதித்ய பிர்லா குரூப் சேர்மனான குமார் மங்கலம் பிர்லா,அனன்யா பிர்லா, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ சேர்மன் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி சோல்கா மேத்தா என பலரும் திரண்டு வருகிறார்கள்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அயோத்தி கோயிலுக்கு வந்துள்ளார்.
காலை 11. 09 மணிக்கு பிரதமர் மோடி அயோத்திக்கு வருகை தந்தார்.
இதேநேரம் பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பாடகர்கள் ராம் பஜனை பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர்.
கடந்த 15 நாட்களாகவே கோயிலுக்குள் வேத பாராயணங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிராண பிரதிஷ்டை எனப்படும் முக்கிய நிகழ்வு இன்று 12.30க்கு நடைபெற உள்ளது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக குழுக்கள் அமைப்பு!
கோவிலில் அடக்குமுறை: ஆளுநர் குற்றச்சாட்டு… பட்டாச்சாரியார் மறுப்பு!
Ayodhya in festival circle