avoid luxuries in functions udhayanidhi stalin

ஆடம்பரங்களைத் தவிர்க்கவும்: உதயநிதி ஸ்டாலின்

அரசியல்

தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வரவேற்பு அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் ஆடம்பரங்களைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாகப் புத்தகங்களையும் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களையும் வழங்குங்கள் என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (மார்ச் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர் அணி செயலாளராக கழக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன்.

என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், காட்டும் அன்பும் என்னை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது.

அதேவேளையில் அன்பை வெளிப்படுத்துவதற்கான வழியாக என்னை வரவேற்று ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது,

வெள்ளிச் செங்கோல்-வாள் போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்குவது, மாலை அணிவிப்பது, பொன்னாடை போர்த்துவது போன்ற நடைமுறை தொடர்கிறது.

இவற்றைத் தவிர்க்கும்படி பல முறை கேட்டுக்கொண்டபிறகும், இவை தொடர்வது வருத்தமளிக்கிறது.

கழகத் தலைவரின் அறிவுரைப்படி, ‘புத்தகங்களை வழங்குங்கள்’ எனக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அப்படி நீங்கள் எனக்கு அளிக்கும் புத்தகங்களைத் தேவைப்படும் பள்ளி-கல்லூரிகளின் நூலகங்களுக்கு வழங்குகிறோம்.

கழக தலைவரின் 70-வது பிறந்தநாளையொட்டி என்னுடைய சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் நான் முன்னெடுத்துள்ள நடமாடும் ‘கலைஞர் நூலகத்தில் உள்ள 4 ஆயிரம் புத்தகங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியவை.

மேலும், ‘ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு வழங்கும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வழங்குங்கள்’ என்று நான் கேட்டுக்கொண்டபடி நீங்கள் என் மீது காட்ட நினைக்கும் அன்பை, இளைஞர் அணி அறக்கட்டளைக்கான நிதியுதவியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நீங்கள் வழங்கும் ஒரு சிறுதொகை எங்கோ ஒரு மூலையில் உதவியை எதிர்நோக்கி இருக்கும் எளியோருக்கான வாழ்வாக அமையும்.

வறுமைப் பின்னணியில் வாழ்வை வெல்லத் துடிக்கும் மாணவச் செல்வங்களின் கல்வி காக்க உதவலாம்.

நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கும் ஒரு புத்தகம் ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைக்கு அறிவின் திறவுகோலாக இருக்கலாம்.

மகளிர் சுயஉதவிக் குழுத் தயாரிப்புகளை, தயாரிப்பவர்-பயன்படுத்துவோர் என இருதரப்புக்கும் பலனளிக்கும்.

எனவே, கழக உடன்பிறப்புக்களாகிய நீங்கள், பயனற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, தேவையானோருக்கு உதவிடும் வகையில் புத்தகங்களையும், அறக்கட்டளைக்கான நிதியுதவியையும், மகளிர் சுய உதவிக் குழுத் தயாரிப்புகளையும் மட்டுமே அன்பளிப்பாக வழங்கிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

செந்தில்பாலாஜியுடன் அண்ணாமலை டீல்: பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் அதிமுகவில் இணைந்தார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்: வரலட்சுமி சரத்குமார்

avoid luxuries in functions udhayanidhi
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *